கரோனா தொற்றின் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று (மே.24) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் இன்று காலை முதல் நடமாடும் வாகனங்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முக்கியமாக காய்கறிகள், பழங்கள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறன.
இந்நிலையில் காய்கறிகள் தொகுப்பு 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலைப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பொருள் | அளவு | விலை |
வெங்காயம் | 1 கிலோ | ரூ.30 |
தக்காளி | 1 கிலோ | ரூ.15 |
கத்திரிக்காய் | 1/2 கிலோ | ரூ.11 |
வெண்டைக்காய் | 1/2 கிலோ | ரூ.8 |
கேரட் | 1/2 கிலோ | ரூ.13 |
வாழைக்காய் | 1 காய் | ரூ.8 |
பச்சை மிளகாய் | 100 கிராம் | ரூ.3 |
இஞ்சி | 1 துண்டு | ரூ.5 |
எழுமிச்சைக்காய் | 2 காய் | ரூ.4 |
கருவேப்பில்லை, கொத்தமல்லி | ரூ.5 | |
பை | 1 | ரூ.3 |
மொத்தம் | ரூ.105 |