ETV Bharat / state

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் அதிகளவில் இடங்களைப் பெறும் முன்னாள் மாணவர்கள் - chennai

2022-23ம் கல்வியாண்டில் பயிற்சி பெற்ற மாணவர்களை விட, அதற்கு முந்தைய ஆண்டுகளில் படித்து முடித்த மாணவர்களே நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் அதிகளவில் இடங்களை பெறும் முன்னாள் மாணவர்கள்

author img

By

Published : Jul 27, 2023, 3:51 PM IST

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், 2022-23ம் கல்வியாண்டில் பயிற்சி பெற்ற மாணவர்களை விட, அதற்கு முந்தைய ஆண்டுகளில் படித்து முடித்துவிட்டு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களே நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கான அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்றுக்கொண்ட நிலையில் அவர்களது கல்லூரிகளில் எந்த வித கட்டணங்களையும் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டு, கல்லூரிகளுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 2993. இதில் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முதல்முறையாக கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 630. அரசுப் பள்ளிகளில் படிக்கும்போதே தனியார் பயிற்சி மையங்களிலும், பள்ளிக்கல்வித்துறையின் பயிற்சியையும் பெற்று 630 மாணவர்கள் தற்போது இடம் பெற்றுள்ளனர். ஆனால், பழைய மாணவர்களின் எண்ணிக்கை 2363 என உள்ளது.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள கல்லறைகளை இடமாற்றம் செய்யும் விவகாரம் - தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

இதனால் இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களை விட, பழைய மாணவர்களுக்கு அதிக அளவில் மருத்துவ படிப்பு இடங்கள் செல்வது உறுதியாகியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களில் தமிழ் வழியில் 1685 மாணவர்களும், ஆங்கில வழியில் 1307 மாணவர்களும், பிற மாெழியில் ஒரு மாணவரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதே போன்று இந்த ஆண்டு பொதுப்பிரிவில் 12ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் இதர மாணவர்களின் எண்ணிக்கை 8,426ஆகவும், பழைய மாணவர்கள் எண்ணிக்கை 17,430 எனவும் உள்ளது.
இதன் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பெருமளவு, பழைய மாணவர்களுக்குச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

அதேபோல் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து 17,440 மாணவர்களும், ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் 313 மாணவர்களும், பிற மாநிலப் பாடத்திட்டத்தில் 149 மாணவர்களும், எஸ்எஸ்சிஇ மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10,947 மாணவர்களும் என 28 ஆயிரத்து 849 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: India Couture Week 2023: ராம்ப் வாக்கில் திகைக்க வைத்த அதிதி ராவ் - ஆடை அழகின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.