ETV Bharat / state

குடியரசுத் தலைவர் தேர்தல் நிறைவு:  தமிழ்நாட்டிற்கான வாக்குப்பெட்டியை டெல்லி கொண்டு சென்ற அலுவலர்கள்!

தமிழ்நாட்டில் நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட பெட்டியை சென்னை விமான நிலையத்திலிருந்து அலுவலர்கள் பாதுகாப்புடன் டெல்லி கொண்டு சென்றனர்.

குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு பெட்டி சென்னையிலிருந்து அதிகாரிகள் பாதுகாப்புடன் டெல்லி கொண்டு செல்லப்பட்டது

author img

By

Published : Jul 18, 2022, 8:58 PM IST

சென்னை: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க இன்று நாடுமுழுவதும் தேர்தல் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கூட்டணியில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

இந்தியா முழுவதும் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதால் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க அந்தந்த மாநில தலைமைச்செயலகத்தில் வாக்கு மையங்கள் அமைத்து ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன.

குடியரசுத்தலைவர் தேர்தல் நிறைவு: தமிழ்நாட்டு வாக்குப்பெட்டியை சென்னையிலிருந்து அலுவலர்கள் பாதுகாப்புடன் டெல்லி கொண்டு சென்றனர்

இதனால் தமிழ்நாட்டின் சென்னை தலைமைச்செயலகத்தில் வாக்கு மையம் அமைக்கப்பட்டிருந்தது. சென்னையில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவை உதவித்தேர்தல் அலுவலரான சட்டப்பேரவைச்செயலாளர் சீனிவாசன் முன்னின்று நடத்தினார். இந்தநிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைக்கப்பட்ட வாக்கு மையத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அதேபோல் புதுச்சேரி தலைமைச்செயலகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு மையத்தில் தேர்தல் பார்வையாளர் சஞ்சய் முன்னிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தமிழ்நாடு பார்வையாளர் சட்டப்பேரவைச்செயளாலர் சீனிவாசன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு செய்யப்பட்ட பெட்டி, சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் முதல் வகுப்பு பயணச்சீட்டு எடுக்கப்பட்டு அலுவலர்கள் அமரும் இருக்கைக்கு பக்கத்திலேயே வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு, அலுவலர்கள் பாதுகாப்புடன் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட பெட்டி நாளை அதிகாலை விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.