சென்னை: தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவினருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில், அனைத்துத் தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1 முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன், கரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்க உத்தேசம் இருப்பதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகளைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித் துறை அலுவலர்கள் தீவிரமாக மேற்கொள்கின்றனர்.
இதையும் படிங்க: அரசு கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்