தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகமாக பரவிவருகிறது. இருப்பினும் தமிழ்நாடு அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. மேலும் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கரோனா தொற்று அதிகமாக பரவிவருகிறது.
இந்நிலையில் அமைச்சர் தங்கமணி, செல்லூர் ராஜூ, அன்பழகன் ஆகிய மூன்று பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்று அமைச்சரின் கார் ஓட்டுனர்கள் மூலம் பரவும் அபாயம் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமைச்சர் சரோஜா காரில் ஓட்டுனருக்கும், பின்னிருக்கையில் இருப்பவருக்கும் தொடர்பில்லாத வகையில் பிளாஸ்டிக்கால் ஆன பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது போன்று விரைவில் அனைத்து அமைச்சர்களின் கார்களிலும் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.