ETV Bharat / state

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு! - சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு

சென்னை: தேசிய அளவில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Postponement of polio vaccination camp in chennai

author img

By

Published : Jan 10, 2021, 10:12 AM IST

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒரே நேரத்தில் நடைபெறும் வகையில் மத்திய அரசு ஏற்பாடு செய்வது வழக்கம்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி வந்தன. அந்தவகையில், நடப்பாண்டில் ஜனவரி 17ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ஜனவரி 16ஆம் தேதி முதல் மருத்துவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதால், தேசிய அளவில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், சொட்டு மருந்து வழங்குவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் - பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.