கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 12ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மே 5ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளது. ஆனால், கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுவரை பள்ளிக் கல்வித் துறை தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தலைமைச் செயலார் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சுகாதாரத் துறை, உள்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைச் செயலாளர்களின் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது