ETV Bharat / state

சிசிடிவி பொருத்திய அறையில் அஞ்சல் வாக்குகளைப் பாதுகாக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் - சிசிடிவி கேமரா

Postal votes should be supervising under CCTV room MHC Order  Postal votes  Postal votes supervising  MHC Order Postal votes
MHC Order Postal votes
author img

By

Published : Mar 26, 2021, 11:49 AM IST

Updated : Mar 26, 2021, 2:54 PM IST

11:42 March 26

முதியோர், மாற்றுத் திறனாளிகளிடம் பெறும் அஞ்சல் வாக்குகள் வைக்கும் இடங்களைக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் இடம் தராத வகையில் கண்காணிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஞ்சல் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகளின் பட்டியலை வழங்கக் கோரி திமுக தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மார்ச் 29ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பட்டியலை மனுதாரருக்கு வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 

ஆனால், இந்த உத்தரவின்படி பட்டியல் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி திமுக தரப்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதேபோல், அஞ்சல் வாக்குப்பதிவு செய்வதில் முறைகேடுகளைத் தவிர்க்க, அஞ்சல் வாக்கு உறைகளில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் கையெழுத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் திமுக தரப்பில் மனு தாக்கல்செய்யப்பட்டிருந்தது. 

இந்த இரு மனுக்களும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், பெரும்பாலான இடங்களில் அஞ்சல் வாக்காளர்களின் பட்டியலை வழங்காமலே வாக்குகள் பெறப்பட்டுவருவதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் முன்னிலையான ஜி. ராஜகோபாலன், மனுதாரர் கோரிக்கையைப் பரிசீலித்ததாகவும், பட்டியல் வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகே அஞ்சல் வாக்குகளைப் பெறத் தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அஞ்சல் வாக்குகள் பெறும்போது வேட்பாளர்களின் பிரதிநிதிகளைக் கையெழுத்திட வேண்டும் எனக் கோரிக்கை குறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், தற்போதைய நிலையில் இதுபோன்ற புதிய நடைமுறையை மேற்கொள்ள முடியாது என்றும், தொகுதியில் ஏராளமான வேட்பாளர்கள் இருப்பதால் இது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார். 

இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அஞ்சல் வாக்குகளில் முறைகேடு செய்ததாக எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம்தராத வகையில், அவற்றைக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்திய அறையில் பாதுகாக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி, திமுக சார்பில் தாக்கல்செய்யப்பட்ட இரு வழக்குகளையும் முடித்துவைத்தனர். 

இதையும் படிங்க: தபால் வாக்குக்கு எதிரான வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

Last Updated : Mar 26, 2021, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.