தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறயிருக்கிறது. இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கூறுகையில், 'வருகிற 12ஆம் தேதி முதல் தற்போது வரை 59 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 58 ஆண்கள் 1 பெண் வேட்பாளர் அடங்குவர்.
மேலும், வேட்பாளர்களின் செலவு கணக்குகள் கண்காணிக்கப்படும். இதுவரை, உரிய ஆவணங்கள் இன்றி 109.45 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. முதல்முறை வாக்காளர்களுக்கு இதுவரை 16 லட்சம் வாக்காளர் அட்டை, விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு இதுவரை 455 அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில், தேர்தல் விதிமுறைகள் மீறும் நபர்கள் மீது சி - விஜிலென்ஸ் மூலம் புகார் அளிக்கலாம். இதுவரை 1,120 புகார்கள் வந்துள்ளன.
அதில் 695 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,1324 தேர்தல் தொடர்பான புகார்களுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு 1,11,738 12டி விண்ணப்பம் வந்துள்ளது.
இந்த மாதம் 16ஆம் தேதி வரை, தபால் வாக்கு விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும், 65 கம்பெனி துணை ராணுவப் படையினர் இதுவரை வந்திருக்கிறார்கள். இவை வருகிற 19ஆம் தேதி துணை ராணுவப் படைகள் வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் பணம், பொருட்களுக்கு, பின்னர் ஆதாரங்களைக் காட்டினால் சம்மந்தப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் திரும்ப வழங்கப்படும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான இரு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம்