அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில், ”மனித உரிமை மீறல்களுக்கு வித்திடும் என்.ஐ.ஏ என்று சொல்லப்படக்கூடிய வரம்பற்ற அதிகாரத்தை வழங்கியதை கண்டித்தும், உபா சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டுவந்திருக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திவருகிறோம்.
தேசிய புலனாய்வு முகமை தொடக்கத்தில் வெறும் 78 வழக்குகளை எடுத்து நடத்தியது. அனால் 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வழக்குகளின் எண்ணிக்கை 272 ஆனது. அதாவது பாஜக அரசு முஸ்லீம்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மக்களின் நலனுக்கு வேண்டி போராடுபவர்களை ஒடுக்குவதற்காக அதிகமான வழக்குகளை எடுத்துக்கொண்டுள்ளது.
குண்டுகள் வைத்து குற்றவாளிகள் என்று சிறையிலிருந்த பாசிச சங்க பரிவாரங்களை விடுதலை செய்ய இந்த என்.ஜ.ஏ எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் துணை நிற்கிறது. சம்ஜோதா குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் மத்திய பிரதேசத்தில் போபாலில் போட்டியிட்டு எம்.பி யாகவும் பதவியேற்றுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இதுவரை 160 ரெய்டுகளை என்.ஐ.ஏ நடத்தியுள்ளது. இதுபோன்ற அதிகார வரம்பற்ற என்.ஐ.ஏ கலைக்கப்பட வேண்டும். இதற்கு பின்னணியாக இருக்கக்கூடிய உபா சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்" என்றார்.