ETV Bharat / state

சிக்கன் பிரியாணியில் எலும்பு இல்லாததால் சப்ளையரைத் தாக்கிய வாடிக்கையாளர் - சப்ளையரை தாக்கிய வாடிக்கையாளர்

சிக்கன் பிரியாணியில் எலும்பு இல்லையெனக் கூறி உணவக ஊழியரை வாடிக்கையாளர் தாக்கிய சம்பவம் கரையான்சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

poonamlle hotel server beaten cctv
சிக்கன் பிரியாணியில் எலும்பு இல்லாததால் சப்ளையரை தாக்கிய வாடிக்கையாளர்
author img

By

Published : Oct 10, 2020, 11:19 PM IST

சென்னை : கரையான்சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் உள்ள சென்னீர்குப்பம் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் சிக்கன் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு வாங்கிச் சென்றவர் வீட்டில் வைத்து சாப்பிட்டபோது, கறியில் எலும்பு இல்லாததால், ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது.

சிக்கன் பிரியாணியில் எலும்பு இல்லாததால் சப்ளையரைத் தாக்கிய வாடிக்கையாளர்

பின்னர் தனது நண்பருடன் ஓட்டலுக்கு வந்த அவர், சிக்கனில் எலும்பு எதுவும் இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த சப்ளையர் சாகுல் ஹமீதை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில், அவருக்கு காது கேட்காமல் போனதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக கடையின் உரிமையாளர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல் துறையினர் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிக்கன் பிரியாணியில் எலும்பு இல்லாததால் ஓட்டல் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிரியாணிக்காக ரகளையில் ஈடுபட்ட சகோதரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.