ETV Bharat / state

15 அடி பள்ளத்தில் அடுத்தடுத்து கவிழ்ந்த பைக் - 5 பேர் படுகாயம்..

பூந்தமல்லியில் சாலை மழைநீர் செல்வதற்காக தோண்டப்பட்ட கால்வாயில் 15 அடி ஆழ ராட்சத பள்ளத்தில் நிலை தடுமாறி அடுத்தடுத்து பைக் விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

15 அடி பள்ளத்தில் அடுத்தடுத்து கவிழ்ந்த பைக்

author img

By

Published : Feb 26, 2023, 10:01 AM IST

15 அடி பள்ளத்தில் அடுத்தடுத்து கவிழ்ந்த பைக்

சென்னை: பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியானது கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் சாலை சந்திப்பு பகுதியில் பூந்தமல்லி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்க ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு, சர்வீஸ் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில் உள்ளது.

சர்வீஸ் சாலையில் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்லாத வகையில் நெடுஞ்சாலை துறையினர் முறையான தடுப்புகள் அமைக்காததால், வழக்கமாக போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், ராட்சத பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி 15 அடி ஆழ பள்ளத்தில் அடுத்தடுத்து உள்ளே விழுந்தனர்.

இதில் பலத்த காயங்களுடன் கதறிய ஐந்து பேரை, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் 5 பேருக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த பகுதியில் தொடர்ந்து சாலை விரிவாக்கப்பணியின் போது வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக மிளிரும் ஒளிப்பான்கள், மின்விளக்குகள், தடுப்புகள் ஏதும் இல்லாமல் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருவதால் தொடர்ந்து சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

தற்போது சர்வீஸ் சாலையில் தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்திற்கு தடுப்புகள் ஏதும் இல்லாததால் வாகன ஓட்டிகள் வேகமாக சென்று 15 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Erode by election: வெளி மாவட்ட வாகனங்கள் தீவிரத் தணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.