ETV Bharat / state

திருவேற்காட்டில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

திருவள்ளூர்: திருவேற்காடு நகராட்சியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
author img

By

Published : Jul 26, 2019, 5:01 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பூந்தமல்லி மதுரவாயல் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால், திருவேற்காடு பெருமாளாகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால், மண்டபத்தின் சுவர் இடிந்து அங்கு தேங்கியிருந்த மழைநீர், அருகே உள்ள ராணி அண்ணாநகர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் நீரில் மூழ்கின. இதனால் இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் தங்க இடமின்றி, மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருவேற்காடு 6வது வார்டில் மழை காலங்களில் வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்து பல்வேறு சிரமத்தை ஏற்படுத்துகின்றது. இதுகுறித்து பலமுறை திருவேற்காடு நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வடிகால் வசதி செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Intro:சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி

Body:சென்னையில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது.குறிப்பாக திருவேற்காடு பூந்தமல்லி மதுரவாயல் பகுதிகளிலும் 1மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்ததால் திருவேற்காடு பெருமாளாகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மழைநீர் தேங்கியது.தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மண்டபத்தின் சுவர் இடிந்து தேங்கியிருந்த மழைநீர் அருகே உள்ள ராணி அண்ணாநகர் பகுதி குடியிருப்பு பகுதியில் புகுந்தது.

Conclusion:மழைநீர் வெள்ளமாக குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர்ப்புகுந்தது.இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் நீரில் மூழ்கின.இதனால் இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் திருவேற்காடு 6வது வார்டில் மழை காலங்களில் வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்து பல்வேறு சிரமத்தை ஏற்படுத்துகின்றது.இதுகுறித்து பலமுறை திருவேற்காடு நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற முறையான வடிகால் வசதி செய்து தரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.