ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கை: சூர்யாவின் கருத்துக்கு கலாம் ஆலோசகர் எதிர்ப்பு

சென்னை: நடிகர் சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை கருத்திற்கு அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ponraj
author img

By

Published : Jul 30, 2019, 8:30 AM IST

'புதிய கல்விக் கொள்கையும் தமிழ்நாட்டின் எதிர்காலமும்' என்ற தலைப்பில் 'தமிழ் கூடல்' என்ற அமைப்பு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் கலந்துகொண்டு தனது கருத்தைப் பதிவுசெய்தார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தேசிய புதிய கல்விக் கொள்கை வரைவில் பல்வேறு விஷயங்கள் வரவேற்கப்பட வேண்டியுள்ளன. ஆனால் அதே நேரத்தில் இந்தக் கல்விக் கொள்கையில் முக்கியமாக சில திருத்தங்களையும் செய்யவேண்டியுள்ளன.

இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வியை கொடுத்துவிட்டு தேர்வு வையுங்கள் என்பதை நாம் ஏற்க முடியாது. மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைத்து தரும் பாடத்திட்டத்தில் மாநிலங்கள் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்பதை திருத்தமாக கொண்டு வரவேண்டும். ஆனால் கணக்கு, அறிவியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் ஆகிய பாடங்களை தேசிய அளவில் பொதுவாக வைத்துக் கொள்ளலாம்.

அதேபோல் மும்மொழிக் கொள்கையின்படி மூன்று மொழிகளை படிக்க வேண்டும். அதுமட்டுமன்றி செம்மொழி பாடத்தினை இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இக்கொள்கையின்படி, பிற மாநில மொழிகளை திணிக்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. தமிழ்நாட்டில் சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட மொழிகளை திணிப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்பதால் இதனை ஏற்க முடியாது.

தொழில் கல்வியானது மூன்று வயது முதல் 12 வயது வரை உள்ளது என கூறியுள்ளனர். தொழிற்கல்வி வாழ்க்கைக்கா அல்லது தொழிலுக்கானதா என்பதை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். தொழிலுக்கானது என்றால் கற்றுக் கொள்ள முடியாது.

பொறியியல் படிப்பை நான்கு ஆண்டிலிருந்து ஐந்தாண்டாக உயர்த்தி ஓராண்டு கட்டாயம் தொழிற்சாலையில் பயிற்சி பெறுவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற மாற்றங்களுடன் புதிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டால் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் இந்தியாவையும் மாற்றி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்.

அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ்

நடிகர் சூர்யா கூறியது போல் இந்தியா முழுவதும் சமமான கல்வியை அளிக்க முடியாது. தமிழ்நாடு கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ளது. பிகார் கல்வியில் பின்தங்கி உள்ளது. எனவே இரு மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்க முடியாது. ஆனால் சூர்யாவின் கருத்து வெளிவந்த பின்னர் பொதுமக்களிடம் புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து விவாதங்கள் அதிகரித்துள்ளதை வரவேற்கிறேன்" என தெரிவித்தார்.

Intro:நடிகர் சூர்யாவின் கருத்திற்கு அப்துல்கலாம் ஆலோசகர் எதிர்ப்பு
Body:நடிகர் சூர்யாவின் கருத்திற்கு அப்துல்கலாம் ஆலோசகர் எதிர்ப்பு

சென்னை,
புதிய கல்விக் கொள்கையும் தமிழகத்தின் எதிர்காலமும் என்ற தலைப்பில் தமிழ் கூடல் என்ற அமைப்பு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் தனது கருத்துகளை பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய புதிய வரைவு கல்விக் கொள்கையில் பல்வேறு விஷயங்கள் வரவேற்கப்பட வேண்டியுள்ளன.
ஆனால் அதே நேரத்தில் இந்த கல்விக் கொள்கையில் முக்கியமாக சில திருத்தங்களையும் செய்யவேண்டியுள்ளது.
இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வியை கொடுத்துவிட்டு தேர்வு வையுங்கள் என்பதை நாம் ஏற்க முடியாது. மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைத்து தரும் பாடத்திட்டத்தில் மாநிலங்கள் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்பதை திருத்தமாக கொண்டு வரவேண்டும்.

ஆனால் கணக்கு அறிவியல் வேதியியல் உயிரியல்-தாவரவியல் ஆகிய பாடங்களை தேசிய அளவில் பொதுவாக வைத்துக் கொள்ளலாம். அதேநேரத்தில் வரலாறு புவியியல் மொழி பாடம் ஆகியவற்றை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அதேபோல் மும்மொழி கொள்கையின் படி மூன்று மொழிகளை படிக்க வேண்டும். அதுமட்டுமன்றி செம்மொழி பாடத்தினை இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் இதில் உள்ள ஒரு விதியின் படி பிற மாநில மொழிகளை திணிக்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. தமிழகத்தில் சமஸ்கிருதம் இந்தி உள்ளிட்ட மொழிகளை திணிப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்பதால் இதனை ஏற்க முடியாது.

அதேபோல் பள்ளி அளவில் பருவத்தேர்வு, வாரிய பொதுத்தேர்வு ஆகியவை இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் உயர்கல்விக்கும் தேர்வுகள் உள்ளது. உயர் கல்வியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வும் இருக்கிறது. எனவே ஏதாவது ஒரு தேர்வினை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் தொழில் கல்வியானது 3 வயது முதல் 12 வயது வரை உள்ளது என கூறியுள்ளனர். தொழிற்கல்வி வாழ்க்கைக்கா அல்லது தொழிலுக்கானதா என்பதை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். தொழிலுக்கானது ஏன்றால் கற்றுக் கொள்ள முடியாது. தற்போது தொழில் முறைகள் அதிக அளவில் முன்னேற்றம் அடைந்து வளர்ச்சி அடைந்துள்ளது எனவே இதனைக் கற்றுக் கொள்வதால் எந்தவித பயனும் ஏற்படாது.

அதேபோல் பொரியல் படிப்பினை நான்கு அன்றிலிருந்து ஐந்தாண்டாக உயர்த்தி ஓராண்டு கட்டாயம் தொழிற்சாலையில் பயிற்சி பெறுவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற மாற்றங்களுடன் புதிய கல்வி கொள்கை ஏற்கப்பட்டால் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையும் மாற்றி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்.
நடிகர் சூர்யா கூறியது போல் இந்தியா முழுவதும் சமமான கல்வியை அளிக்க முடியாது. தமிழகம் கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ளது பீகார் கல்வியில் பின்தங்கி உள்ளது. எனவே இரு மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்க முடியாது. ஆனால் சூர்யாவின் கருத்து வெளிவந்த பின்னர் பொதுமக்களிடம் புதிய வரைவு கல்வி கொள்கை குறித்து விவாதங்கள் அதிகரித்துள்ளதை வரவேற்கிறேன் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.