சென்னை: கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் தாம்பரம் அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (33) வாகன பழுது பார்க்கும் தொழில் செய்துவந்தார். இவர் நவம்பர் 13ஆம் தேதி பித்தப்பையில் கல் இருப்பதாகக் கூறி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 15) காலை அவர் உயிரிழந்தார்.
இது குறித்து விக்னேஷின் அண்ணன் பார்த்திபன் மருத்துவமனை சிகிச்சை முறை குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் அளித்தப் பேட்டியில், “சில நாள்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட தம்பியை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தோம். அப்போது அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க |
அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் தங்களால் அதிகளவில் பணம் செலவு பண்ண முடியாது என்பதால், கலைஞரின் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நவம்பர் 13ஆம் தேதி சேர்த்தோம். ஆனால், அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு எந்தவித சிகிச்சையும் ஒழுங்காக வழங்கவில்லை. சிகிச்சை சரியாக வழங்குவதால் அவர் உயிரிழந்து விட்டார்.
தம்பி விக்னேஷின் நிலையை மருத்துவர்கள் முன்கூட்டியே கூறியிருந்தால் நாங்கள் வேறு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்த்திருப்போம். மருத்துவர்கள் சரியான சிகிச்சை வழங்காததால் தனது தம்பி உயிரிழந்தார்,” என அண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.