சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.27) சட்டத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய பொன்னேரி தொகுதி உறுப்பினர் துரை சந்திரசேகர், "வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அரசு இது. இதுவும் காமராஜர் ஆட்சி தான்" எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "போக்சோ சட்ட வழக்குகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விசாரித்து தண்டனை பெற்றுத்தரும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பாகுபலி படத்தின் கதாநாயகனை போலான முதலமைச்சரை நாம் கொண்டுள்ளோம்.
பெண்களின் மீது கை வைத்தவனின் விரலை வெட்டக்கூடாது, தலையை வெட்ட வேண்டும்" என்ற படத்தின் வசனத்தை கூறி புகழ்ந்தார். மேலும், பிறழ் சாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். வழக்கறிஞர்களுக்கு வங்கிகளில் கடன் வழங்குவது கிடையாது.
வாடகைக்கு வீடு தருவது கிடையாது. மாநில அரசு மத்திய அரசிடம் நிதியுதவியை பெற்றோ, நிதியை உருவாக்கியோ விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்", என்றார்.
இதையும் படிங்க: மகளிர் முன்னேற்றத்திற்கு நமது 'திராவிட மாடல் அரசு' என்றும் துணை நிற்கும் - ஸ்டாலின் உறுதி