போக்குவரத்துத் துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (10.01.2020) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,225 பேருந்துகளில் அனைத்து பேருந்துகளும், 750 சிறப்பு பேருந்துகளில் 354 பேருந்துகள் என மொத்தம் 2,579 பேருந்துகளில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 845 பயணிகள் பயணித்துள்ளனர்.
பண்டிகை காலங்களில் சென்னையில் பணிபுரியும் பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல கடும் சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாகவே அனைத்து வழித்தடங்களிலும் அதிகப்படியான பேருந்துகளை இயக்கி வருகிறது. இன்னும் பண்டிகை நாட்கள் நெருங்கும்போது அதிகப்படியான பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'தமிழரின் பொங்கல் கலாசாரம் பெருமை மிக்கது' - வியக்கும் சீன மாணவிகள்