பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வேலை செய்யும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு விமானங்களில் பயணம் செய்கின்றனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமான இருந்தன.
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு இன்று (ஜன.13) 3 விமானங்களும், சென்னையிலிருந்து மதுரைக்கு 5 விமானங்களும், சென்னையிலிருந்து திருச்சிக்கு 2 விமானங்களும், சென்னையிலிருந்து கோவைக்கு ஏழு விமானங்களும் செல்கின்றன.
சென்னை, சேலம் செல்லும் விமானங்களில் மட்டும் குறைந்த அளவு டிக்கெட்டுகள் உள்ளன. பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால் டிக்கெட்டுகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளன. தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ. 3 ஆயிரமாக இருந்த டிக்கெட் விலை தற்போது 8,500 ரூபாயாகவும், மதுரைக்கு ரூ. 2,500ஆக இருந்த டிக்கெட் விலை தற்போது 6 ஆயிரம் ரூபாயாகவும், திருச்சிக்கு வழக்கமாக ரூ. 2,400ஆக இருந்த டிக்கெட் விலை தற்போது 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கோவை, சேலம் விமானங்களிலும் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. உயர் வகுப்பு கட்டணம் ரூ. 12,500வரை உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும் - முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து