பூந்தமல்லியில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதி குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுபான கடை இயங்கி வருகிறது. இதனை அகற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் உதவி ஆணையர் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. இருப்பினும் அதிரகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மதுபான கடை தொடர்ந்து அப்பகுதியில் இயங்கி வருகிறது.
![Ponamalle MGR nagar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2758121_mgr-nagar.jpg)
இதனால் அதிருப்தி அடைந்த எம்ஜிஆர் பகுதி மக்கள், குறிப்பிட்ட மதுக்கடையை அகற்றும் வரை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், திமுக சார்பில் பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணசாமி, அப்பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்திக்க வந்தபோது, மதுபான கடையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனுவை மக்கள் அளித்தனர்.