ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்; கடைசி நாள் வாக்கு சேகரிப்பு - அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரை - உள்ளாட்சித் தேர்தல் கடைசி நாள் பிரச்சாரம்

உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பரப்புரையின் கடைசி நாளான நேற்று அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

political-parties-rushed-campaigns-in-last-day-of-local-body-election
அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை
author img

By

Published : Dec 26, 2019, 4:08 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான முதல்கட்ட தேர்தல் பரப்புரை நேற்றுடன் கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் மிக தீவரமாக தங்களின் பரப்புரையை மேற்கொண்டனர்.

அரியலூர்
அரியலூர் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் பொய்யூர், அருங்கால், கீழவண்ணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக ஆளுங்கட்சியாக கட்சியாக உள்ளதால் மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசால்தான் நிறைவேற்ற முடியும் என பரப்புரை மேற்கொண்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அதிமுக, திமுக, அமமுக, சுயேச்சை வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதில் பல வேட்பாளர்கள் தப்பாட்டம், நடனம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாக்கு சேகரித்தனர். மாலையில் பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் வேட்பாளர்கள் பரப்புரை செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர், நாச்சியார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேஸ்வரி சங்கர், மற்றும் சுயேச்சை சின்னத்தில் ரோடு ரோலர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர், திருநரையூர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடும் மதினாபேகம் உள்ளிட்ட அனைத்து கட்சியினர்களுடன் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், மொரப்பூா், ஏரியூா் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பரப்புரை மேற்கொண்டார் .

தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே உள்ள குமாரகிரி, சிவஞானபுரம், அகிலாண்டபுரம், காப்புலிங்கம்பட்டி பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "20 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் இருந்த டிக்கெட் விலையை இந்த அரசுதான் நிர்ணயம் செய்தது. இதனால்தான் திரையரங்குகள் மூடப்படுவது தடுக்கப்பட்டது. மேலும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு முறை கேளிக்கை வரி குறைக்கப்பட்டது" என்றார்.

political-parties-rushed-campaigns-in-last-day-of-local-body-election
திருவாரூர்

திருவாரூர்

திருவாரூரில் திமுக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றிய பகுதியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன், உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுகவினர் தேர்தலில் நிற்க பயந்து கொண்டுதான் நீதிமன்றத்தை நாடியதாக விமர்சனம் செய்தார். வாக்கு சேகரிப்பில் தேமுதிக, பாமக கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இதையும் படியுங்க: தேர்தலில் போட்டியிடும் திருநங்கைக்கு மிரட்டல்... மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

Intro:தி.மு.க வினர் உள்ளாட்சி தேர்தலில் நிற்க பயந்து கொண்டுதான் நீதிமன்ற நாடியதாக குன்னம் சட்டமன்ற உறுப்பினர் RT. இராமச்சந்திரன் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு .Body:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்:27 மற்றும் டிச: 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் டிசம்பர் 27 - ந் தேதி பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களிலும்
டிசம்பர் 30-ந் தேதி ஆலத்தூர்
வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களிலும்
தேர்தல் நடைபெற உள்ளது.
இதனிடையே டிசம்பர் 27 ந் தேதி நடைபெறுகின்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த குன்னம் சட்டமன்ற உறுப்பினர் RT. இராமச்சந்திரன்
பேசியதாவது.
உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக வினர் தேர்தலில் நிற்க பயந்து கொண்டு தான் நீதிமன்றத்தை நாடியதாக குற்றச்சாட்டினார்.Conclusion:இந்த வாக்கு சேகரிப்பில் அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.