ETV Bharat / state

உதவி ஆய்வாளரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை - chennai latest news

சென்னை: நரியங்காடு காவலர் குடியிருப்பில் உதவி ஆய்வாளரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையடுத்து எழும்பூர் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Police wife suicide
Police wife suicide
author img

By

Published : Oct 7, 2020, 7:37 AM IST

சென்னை புதுப்பேட்டை அருகேயுள்ள நரியங்காடு காவலர் குடியிருப்பில் வசிப்பவர், கிருஷ்ணமூர்த்தி. இவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகின்றார். இவருக்கு கவிதா(40) என்ற மனைவியும் பரத், அஸ்வின் என இரு மகன்களும் உள்ளனர்.

இவரது மகன்கள் இருவரும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர். காவலர் குடியிருப்பில் கிருஷ்ணமூர்த்தியும் அவரது மனைவியும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மனைவி கவிதா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி கடைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த கவிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் கடைக்குச் சென்ற கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி கவிதா தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த எழும்பூர் காவல் துறையினர் கவிதா சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

“மீனவர் கார்சன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு”- அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.