ETV Bharat / state

ஸ்மார்ட் வாட்ச்சால் காவலர் பணியிடை நீக்கம்.. தவறான சிகிச்சையால் மருத்துவர் கைது - சென்னை குற்றச் செய்திகள்! - smart watch

Chennai Crime News: ஸ்மார்ட் வாட்ச்சால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் முதல் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் வரை, சென்னை பிரதான இடங்களில் அரங்கேறிய பல குற்றச் சம்பவங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

chennai Crime News
சென்னை குற்றச் செய்திகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 6:59 AM IST

சென்னை: ஓட்டேரி செங்கை சிவம் மேம்பாலத்தில் ராயல் என்ற இளைஞர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற ஓட்டேரி காவல் நிலைய காவலர் விமல், ராயலை அழைத்து எச்சரித்துள்ளார். மேலும், இளைஞரின் ஸ்மார்ட் வாட்ச்சினை வாங்கிக் கொண்டு, காவல் நிலைய உதவி மையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ராயல் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் விசாரணை மேற்கொண்டு, காவலர் விமலை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஏலச்சீட்டு மோசடி வழக்கு: திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சொப்னா என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டு கொடுங்கையூரைச் சேர்ந்த சிவசங்கர் மற்றும் கலைச்செல்வி தம்பதியினரிடம் மாத தவணையில் சீட்டு கட்டி வந்துள்ளார். இந்த நிலையில், ஏலச்சீட்டு முடிந்து தற்போது சொப்னா பணத்தை கேட்டபோது, சிவசங்கர் மற்றும் கலைச்செல்வி தம்பதி பணம் தர மறுத்து உள்ளனர்.

இதனால், சொப்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நீதிமன்றம், பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில். சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சிவசங்கர் மற்றும் கலைச்செல்வி தம்பதியினரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், தம்பதி ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது.

தவறான சிகிச்சை அளித்த யுனானி மருத்துவர் கைது: மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர், சீனிவாசன். இவரது மகன் அஸ்வந்த்க்கு (17) சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அஸ்வந்த்தை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அஸ்வந்தைப் பரிசோதித்த மருத்துவர் ஷேக் முகமது முபின், ஊசி செலுத்தி உள்ளார். பின், மறுநாள் அஸ்வந்துக்கு ஊசி செலுத்திய இடம் முழுவதும் கருப்பாக மாறியதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின், அஸ்வந்தை போரூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு அஸ்வந்தைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஊசி செலுத்திய இடம் அழுகி விட்டதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அஸ்வந்த் உயிரிழந்துள்ளார்.

இதனால் தனது மகனுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், மாமல்லம் போலீசார் மருத்துவர் ஷேக் முகமது முபினை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், மருத்துவர் யுனானி மருத்துவம் படித்துவிட்டு, நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துகளை வைத்து சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:கும்பகோணத்தில் அடுத்தடுத்து சிக்கிய உரிமம் இல்லாத 3 கைத்துப்பாக்கிகள்.. போலீசார் தீவிர விசாரணை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.