ETV Bharat / state

சென்னையில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது - சென்னை க்ரைம் நியூஸ்

சென்னை: மடிப்பாக்கத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

Chennai police seized 101 liquor bottles

author img

By

Published : Jun 14, 2020, 10:33 PM IST

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துவருவதால், சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து பல்வேறு நபர்கள் சட்ட விரோதமாக மதுபானத்தை வாங்கிவந்து, சென்னையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர்.

அந்த வகையில் மடிப்பாக்கம் வானுவாம்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் சேட்டு என்பவரைக் கைதுசெய்து, அவர் மறைத்து வைத்திருந்த 101 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.