ETV Bharat / state

தமிழ்நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டம்; பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் போலீஸ்

author img

By

Published : Aug 13, 2023, 4:44 PM IST

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தகவல்

சென்னை: சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை பெருநகரில் 9 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேருரை ஆற்றுகிறார்.

இதனால் சுதந்திர தின விழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் மேற்பார்வையில் சுமார் 9 ஆயிரம் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சென்னை பெருநகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையம், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் இதர இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: "நீட் தேர்வு விலக்கிற்கும், ஆளுநருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மேலும் சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் சில நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகன ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் மூலம் தீவிர வாகனத் தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்து உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: எங்க ஊரூ மெட்ராஸு.. சென்னை தினத்தின் கொண்டாட்டம் எப்படி இருக்கப் போகிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.