சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மல்லிகை தெருவைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்-திவ்யா (25) தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.
தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று (டிச.11) இரவு விக்னேஷ் வேலைக்கு சென்றார்.
இன்று (டிச.12) காலை அவர்களது குழந்தை வெகு நேரமாக அழுதது. உடனே அக்கம்பக்கத்தினர் தம்பதி வீட்டின் கதவை தட்டினர். கதவை திறக்க யாரும் வராததால், அவர்கள் விக்னேஷுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் விக்னேஷ் வந்து கதவை உடைத்து பார்த்தபோது திவ்யா தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரது உயிரிழப்பு கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்னை: மனைவி தூக்கிட்டுத் தற்கொலை!