சென்னை, பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சத்தியேந்திரன், செல்வி தம்பதியினர். இவர்களுது மகன் நிர்மல்(15), கெல்லீஸ் பிளான்சன் கார்டன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று(பிப்.1) காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிர்மல் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்ததுள்ளனர். பள்ளி முடிந்தவுடன் அவர் கிளம்பிவிட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததையடுத்து, பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர்.
இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் பெற்றோர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அடுத்தவரின் காரை தன் காரெனக் கூறி விற்க முயற்சி: ரூ.10 ஆயிரம் மோசடி செய்த நபர் கைது!