ETV Bharat / state

அம்பத்தூர் அருகே 10 சவரன் நகை திருட்டு! - நகை திருட்டு

சென்னை: அம்பத்தூர் அருகே தனியார் நிறுவன அலுவலரின் வீட்டில் 10 சவரன் நகை, பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

10 சவரன் நகை திருட்டு: சிசிடிவி மூலம் விசாரணை!
Police investigate about jewels theft
author img

By

Published : Oct 26, 2020, 8:54 PM IST

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் தேஸ்வா (39). இவர், வில்லிவாக்கத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி எழிலரசி. இவர் ஐ.டி. ஊழியராகவுள்ளார்.

இந்நிலையில் நேற்று (அக். 25) தேஸ்வா வீட்டைப் பூட்டிவிட்டு, எழிலரசியுடன் கல்பாக்கத்திலுள்ள உறவினர் திருமணத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று (அக். 26) அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து தேஸ்வாவிற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, வீடு வந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து தேஸ்வா கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்டமாக அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியை வைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.