ETV Bharat / state

அரசு ஊழியர் உயிரிழப்பு - இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தார் புகார்! - சென்னை சோழிங்கநல்லூர்

சென்னை சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அவரது குடும்பத்தார் அளித்தப்புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர் உயிரிழப்பு
அரசு ஊழியர் உயிரிழப்பு
author img

By

Published : May 19, 2022, 3:30 PM IST

சென்னை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (56). இவர் சோழிங்கநல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று (மே 18) அலுவலகத்திற்குச் சென்ற அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவரது மனைவி தனலட்சுமிக்கு மண்டல அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவித்தார்.

பிறகு கணவர் இறந்துவிட்டதாகவும் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனைவி தனலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தனலட்சுமி உடனடியாக மருத்துவமனைக்குச்சென்று தனது கணவரின் சடலத்தைக் கண்டு கதறி அழுதார்.

இதையடுத்து தனது கணவர் சத்தியமூர்த்தி இறப்பில் சந்தேகம் இருப்பதாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இறந்து போன சத்தியமூர்த்தியின் மகள் பிரீத்தி கூறுகையில், "எனது தந்தை சத்தியமூர்த்தி சோழிங்கநல்லூர் மண்டலத்தில் பணியாற்றினார். வீட்டில் இருந்து அலுவலகத்தின் தொலைவு அதிகம். இதனால், இடமாற்றம் வேண்டும் என அலுவலர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை; இந்நிலையில் எனது தந்தை எப்படி இறந்து போனார் என்பது தெரியவில்லை. தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்.

ஆனால், மண்டல அலுவலக அலுவலர்கள் உரிய முறையில் எந்த தகவலையும் அளிக்கவில்லை. ஆட்டோவில் தான் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். என் தந்தையின் இறப்பில் இருக்கும் சந்தேகம் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: பேக்கரி கடை உரிமையாளர் மீது தாக்குதல்: சட்டக்கல்லூரி மாணவன் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.