ETV Bharat / state

சிறுமிகளை காவல் துறை வேனில் வைத்து விசாரித்த விவகாரம்: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு - ரூ.1 லட்சம் போட்ட மனித உரிமை ஆணையம்

போலீஸ் வேனில் காவலர் உடையில் சிறுமிகளிடம் விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Police inquires girls in a police van
Police inquires girls in a police van
author img

By

Published : Nov 29, 2021, 10:36 PM IST

Updated : Nov 29, 2021, 10:48 PM IST

சென்னை: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

பக்கத்து வீடுகளைச் சேர்ந்த காசி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் முருகன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவருக்கும் இடையிலான தகராறு தொடர்பாக விசாரிக்க வந்த அரித்துவாரமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார், காசியை லத்தியால் தாக்கியுள்ளார்.

இதைத் தட்டிக் கேட்ட குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த உதவி ஆய்வாளர், வழக்கு ஒன்றில் அவரை கைது செய்வதற்காக, அவரது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, 8 மற்றும் 5 வயதுடைய சிறுமிகளை காவல் துறையினரின் வேனுக்குள் வைத்து விசாரித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட அச்சத்தில் குழந்தைகள், ஒரு வாரத்துக்கு பள்ளிக்குச் செல்லவில்லை என்றும், காவல் துறையினரால் தனது உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குமார், மனித உரிமை ஆணையத்தில் புகார் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

இந்தப் புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், சிறப்பு உதவி ஆய்வாளரின் நடத்தையால் சிறுமிகள் அச்சத்தின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டதால், குமாருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

சிறுமிகளை காவல் துறையினர் வேனில் வைத்து விசாரித்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆணையம், காவல் நிலைய ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை எப்படிக் கையாள வேண்டும் என காவல் துறையினருக்குப் பயிற்சி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவின் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் - அமைச்சர் ரகுபதி

Last Updated : Nov 29, 2021, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.