வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் கனரக வாகனங்களில் கஞ்சா எடுத்து செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பூவிருந்தவல்லி அருகே சென்ற லாரியை மடக்கி சோதனை செய்தபோது லாரியில் பயணம் செய்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் சந்தேகமடைந்து அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா எடுத்துச் செல்வது தெரிந்தது.
இதையடுத்து இவர்களிடம் இருந்து 17 லட்சம் மதிப்புள்ள 205 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சுதாகர், அபிலாஷ், சம்சீர், சுபைத் என்ற நால்வரிடம் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து பார்சலில் வந்த கஞ்சா: ஊரடங்கு நேரத்திலும் கைவரிசை!