செங்கல்பட்டு: மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு கலைப்பொருட்கள் விற்பனைக்கூடத்தில் கடந்த ஜனவரி மாதம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக வைத்திருந்த ராவணன் சிலை உட்பட 12 பழங்கால சிலைகளை மீட்டு, அதன் உரிமையாளரான ஜாவீத் ஷா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 4ஆம் தேதி மாமல்லபுரத்திலுள்ள the boutique என்ற நிறுவனத்தில் சோதனையிட்டபோது சட்டவிரோதமாக 3 பழங்கால சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் சிலைகளுக்கு உண்டான தகுந்த ஆவணங்கள் உரிமையாளரிடம் இல்லாததால் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் 3 பழங்கால சிலைகளான பார்வதி அம்மன் சிலை, சிவன் சிலை உட்பட 3 சிலைகளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் தமிழ்நாடு கோயில்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ.2.50 கோடிக்கு மேல் இருக்கலாம் எனவும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சிலைகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தெலங்கானா; அயன் பட பாணியில் போதை மாத்திரை கடத்திய ஆப்பிரிக்கர் கைது!