சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் கடந்த 26.12.2021 முதல் 01.01.2022 வரையிலான ஒரு வாரக் காலத்தில் கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 527 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் முகக்கவசம் அணியாத 2,544 நபர்கள் மற்றும் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்காத 4 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசால் மே மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையிலிருந்து வந்த நிலையில், அரசு 21.06.2021 காலை முதல் 10.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
இதனையடுத்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் முறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 வாகன தணிக்கைச் சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்துக் கண்காணித்து, தமிழ்நாடு அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் குழுவினர் 26.12.2021 முதல் 01.01.2022 வரையிலான ஒரு வாரக் காலத்தில் வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியவர்கள் மீது 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 523 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 527 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், முகக்கவசம் அணியாமல் சென்ற நபர்கள் மீது 2,544 வழக்குகளும், தகுந்த இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது 4 வழக்குகளும் பதிவு சமூக செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ராணுவத்தில் மூன்று மகன்கள்; திருநெல்வேலி பெண்மணிக்கு வீரத்தாய் விருது!