ETV Bharat / state

பெரம்பூர் நகை கொள்ளை பல நாள் திட்டம்; இதை விசாரிக்க 2 தனிப்படைகள் - சென்னை காவல் ஆணையர்

author img

By

Published : Feb 14, 2023, 10:09 PM IST

சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை பல நாள்கள் திட்டம் தீட்டி திருடப்பட்டுள்ளதாகவும், மேலும், நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை பல நாள் திட்டம் தீட்டி திருடப்பட்டுள்ளது- காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை பல நாள் திட்டம் தீட்டி திருடப்பட்டுள்ளது- காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்

பெரம்பூர் நகை கொள்ளை பல நாள் திட்டம்; இதை விசாரிக்க 2 தனிப்படைகள் - சென்னை காவல் ஆணையர்

சென்னையில் தொடர் விழிப்புணர்வு காரணமாக ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை 85 சதவீதமாக கடந்த ஆண்டு உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து செல்பவர்களும் 13 சதவீதம் அளவிற்கு ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.

கடந்த வருடம் ஹெல்மெட் அணியாததால் 50 சதவீதம் விபத்துகள் நடந்துள்ளன. அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் இருவரும் ஹெல்மெட் அணிந்து சென்றால் அவர்களை பாராட்டும் வகையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அவர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி சென்னை - வேப்பேரி சிக்னலில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால், ''இதுபோன்று தொடர்ந்து ஒரு வாரம் இந்த விழிப்புணர்வு நடைபெறும் எனவும், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5000 சான்றிதழ்கள் கொடுப்பதற்கான நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விரைவில் சென்னையின் முக்கிய சாலைகளில் வேகமாக செல்வதைக் கண்டறிந்து உடனடியாக அபராதம் செலுத்தும் வகையில் "ஸ்பீடு கேம் மானிட்டர்" பொருத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதனையடுத்து பெரம்பூர் நகைக்கடை கொள்ளையினை பொறுத்தவரையில், முக்கியத் தகவல்கள் கிடைத்து இருப்பதாகவும், வேற்று மாநிலத்தவர்கள் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தக் கடையில் கொள்ளை அடிக்கலாம் என்பதற்காக "ரெய்கி ஆப்ரேஷன்" எனப்படும் கொள்ளையடிப்பதற்கு முன்பாக நோட்டமிட்டு, திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்கள் நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சில கொள்ளையர்களின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், சில கொள்ளையர்களின் பெயர்கள் தெரிந்துள்ளதாகவும், மேலும், இதே போன்று ஏற்கனவே குற்றம் செய்த குற்றவாளிகளின் பட்டியலை வைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

பெரம்பூர் நகைக்கடை கொள்ளையினை பொறுத்தவரையில், காவல் இணை ஆணையர் தலைமையில் 2 துணை ஆணையர்கள், மூன்று உதவி ஆணையர்கள் என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரண்டு தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று ஆந்திரா, கர்நாடகாவில் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, அவற்றை ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட போலிப் பதிவு எண் வாகனம் தான் குற்றவாளிகளை நெருங்க முக்கிய துருப்புச்சீட்டாக பயன்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், சென்னை ஐஐடி தற்கொலை விவகாரத்தை பொறுத்தவரையில், உயிரிழந்த மற்றும் தற்கொலைக்கு முயன்ற மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்கொலை கடிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையை அடிப்படையாக வைத்தும் தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் செயல்படும் நிர்வாகக்குழு விசாரணை நடத்தி வருவதாகவும், ஆசிரியர்கள் கொடுத்த மன அழுத்தம் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து சாட்சியங்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரம் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளதாகவும், திருவண்ணாமலை கொள்ளையர்களைப் பிடிக்க தொழில்நுட்ப ரீதியாகவும், செல்போன் அழைப்புகள் உள்ளிட்ட விவகாரங்கள் மூலமாகவும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் போலீசார் உதவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை யானைக்கவுனியில் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடித்த சம்பவத்தில் ரூ.96 லட்சம் வரை இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யானைக்கவுனியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பயங்கரவாதத் தொடர்பு குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

செல்போன் மற்றும் செயின் பறிப்புகளை பொறுத்தவரையில் கடந்த 2021ஆம் ஆண்டு 470 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டு 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பாதியாக குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நகைக்கடையினை பொறுத்தவரையில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை உதவியாக இருக்கும் எனவும்; சிசிடிவி கேமராக்களை பொருத்துவது கொள்ளை அடிக்க முயற்சித்தால் அலாரம் அடிக்கும் வகையிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை சில நகைக்கடைகளில் செய்துள்ளனர் என்றும்;

தற்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தால் ரோந்து வாகனம் சுமார் இரண்டு நிமிடங்கள், 15 விநாடிகளுக்குள் சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை மேற்கொள்வதால் குற்றச்சம்பவங்கள் நடந்தவுடன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாலே போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள் பகுதி காவல் நிலைய எண் உள்ளிட்ட விவகாரங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும்; சென்னை காவல்துறை ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார். முன்னதாக ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய சென்னை காவல் ஆணையர் ரோஜா பூக்களையும் பரிசாக அளித்தார். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த சிவப்பு ரோஜாக்களை நான் பரிசாக அளிக்கவில்லை எனவும், முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்வு இது எனவும் வேடிக்கையாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு: பிபிசி நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.