ETV Bharat / state

ஆபத்தா 100-க்கு அடிங்க... நாங்க வருவோம் - காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு - control room police

பொதுமக்களின் அவசர காவல் உதவி தொலைபேசி எண் 100இல் புகார்களைப் பதிவுசெய்தால் சம்பவ இடத்திற்கு குறைந்த நேரத்தில் காவல் ரோந்து வாகனங்கள் சென்று நடவடிக்கை எடுக்க உதவிடும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை காவல் அலுவலர்கள், ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

police-commissioner-shankar-jiwal-congratulate-control-room-police
கட்டுப்பாட்டு அறை காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
author img

By

Published : Sep 11, 2021, 8:54 AM IST

சென்னை: எழும்பூர் பழைய காவல் ஆணையரகத்தில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் (State Police Control room) அவசர காவல் உதவி எண் 100 மையம் 24 மணி நேரம் சுழற்சி முறையில் செயல்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் உடனடித் தேவைக்காக அவசர காவல் உதவி தொலைபேசி எண் 100ஐ தொடர்பு கொள்ளும்போது, மாநில கட்டுப்பாட்டு அறையில் தகவல்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட நகரம் அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு மண்டலங்கள், போக்குவரத்து வடக்கு, தெற்கு காவல் மண்டலங்கள் ஆகிய ஆறு கட்டுப்பாட்டு அறைகள் நவீனமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

police commissioner shankar jiwal congratulate control room police
காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

கடந்த இரண்டு மாதங்களில், 100ஐ அழைத்து பொதுமக்கள் அளிக்கும் சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள்பட்ட புகார்கள் மீது, காவல் ரோந்து வாகனங்கள் ஐந்து நிமிடங்களுக்குள் விரைந்துசென்று துரித நடவடிக்கை எடுத்துவருகிறது.

இதனால், ஜூலை 10ஆம் தேதிமுதல் கட்டுப்பாட்டறை புகார்கள் மீது மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாடு காவல் துறையின் அனைத்து மாவட்டங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருந்த சென்னை பெருநகர நவீன காவல் கட்டுப்பாட்டறை, தற்போது தரவரிசையில் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேலும், எம்டிடி எனப்படும் மொபைல் டேட்டா டெர்மினல் (Mobile Data Terminal) என்ற கருவி சென்னை பெருநகரில் உள்ள 354 ரோந்து வாகனங்களிலும் பொருத்தப்பட்டு ரோந்து வாகனங்கள் நிலைகொண்டுள்ள இடம், செல்லும் திசைகள் கண்டறியப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துசெல்ல உதவி செய்யப்பட்டுவருகின்றன.

சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறையில் திறம்பட பணிசெய்து, பொதுமக்களின் அவசர உதவி 100 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு (சட்டம் & ஒழுங்கு), போக்குவரத்து வடக்கு, தெற்கு கட்டுப்பாட்டறைகளின் ஆய்வாளர்கள், காவல் குழுவினர்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று (செப். 10) நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு இடையூறு செய்யவே புதிய ஆளுநர்... சும்மா இருக்க மாட்டோம் - பொங்கும் அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.