ETV Bharat / state

சென்னையில் போராட்டம் நடத்த தடை - Police Commissioner orders protests in Chennai

சென்னை: சென்னையில் போராட்டம் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் போராட்டம் நடத்த தடை
சென்னையில் போராட்டம் நடத்த தடை
author img

By

Published : Feb 29, 2020, 2:15 AM IST

சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடத்தக்கூடிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனிதச் சங்கிலி, உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளை நடத்த அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு அடுத்த 15 நாள்கள் அமலில் இருக்கும். இதனை காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888பிரிவு 41(2) அதிகாரங்களை கொண்டு இன்று இரவு முதல் மார்ச் 14 ஆம் தேதி இரவு வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போராட்டம் நடத்த தடை
சென்னையில் போராட்டம் நடத்த தடை

மேலும் அதில், "பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் நடக்ககூடிய மதம் சார்ந்த நிகழ்ச்சி, திருமண ஊர்வலம், மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

போராட்டம் நடத்த விருப்பமுள்ளவர்கள் ஐந்து தினங்களுக்கு முன்னரே அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்க வேண்டும்" என உள்ளது.

இதையும் படிங்க:

'ஒருபுறம் நரசிம்மர்! மறுபுறம் ஆஞ்சநேயர்!' - சிலைக்குள் ஒளிந்துள்ள கலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.