சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா மெர்சி (26). இவருக்கும் கேரளாவின் மூணாறு பகுதியைச் சேர்ந்த பொறியாளர் அருண்குமார் (32) என்பவருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது சித்ராவுக்கு 50 சவரன் தங்க நகைகள், மூன்று லட்சம் ரொக்கம், ஒரு பைக் ஆகியவற்றை சீர்வரிசையாக அவரது பெற்றோர்கள் கொடுத்தனர்.
அதன் பிறகு, அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு கலைவானர் நகர்ப் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் மூன்று லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி வாடகைக்கு வீடு எடுத்தனர். இதற்கிடையில், சரிவர வேலைக்குச் செல்லாமல் அருண்குமார் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து, புதிய தொழில் தொடங்குவதற்காக மனைவி சித்ராவிடம் பயணம் கேட்டுள்ளார்.
இதன் பிறகு, கடந்த மாதம் தன் சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு பெற்றோரிடம் பணம் வாங்க சித்ரா மெர்சி சென்றுள்ளார். பின்னர், மீண்டும் அம்பத்தூருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது இவர் தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது, அருண்குமார் அவரது பெற்றோர் ஆகியோர் வீட்டை காலி செய்து விட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, அருண்குமாரை தொடர்பு கொண்ட சித்ரவை, கொன்று விடுவேன் என்று அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் நிலையத்தில், தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல், தனது நகைகள், பணத்தை அபகரித்த அருண்குமார் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.
அதன் பேரில், மோசடி செய்த அருண்குமார் அவரது பெற்றோர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த பொறியாளருக்கு போலீஸ் வலை! - police
சென்னை: அம்பத்தூர் அருகே பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற பொறியாளரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா மெர்சி (26). இவருக்கும் கேரளாவின் மூணாறு பகுதியைச் சேர்ந்த பொறியாளர் அருண்குமார் (32) என்பவருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது சித்ராவுக்கு 50 சவரன் தங்க நகைகள், மூன்று லட்சம் ரொக்கம், ஒரு பைக் ஆகியவற்றை சீர்வரிசையாக அவரது பெற்றோர்கள் கொடுத்தனர்.
அதன் பிறகு, அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு கலைவானர் நகர்ப் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் மூன்று லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி வாடகைக்கு வீடு எடுத்தனர். இதற்கிடையில், சரிவர வேலைக்குச் செல்லாமல் அருண்குமார் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து, புதிய தொழில் தொடங்குவதற்காக மனைவி சித்ராவிடம் பயணம் கேட்டுள்ளார்.
இதன் பிறகு, கடந்த மாதம் தன் சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு பெற்றோரிடம் பணம் வாங்க சித்ரா மெர்சி சென்றுள்ளார். பின்னர், மீண்டும் அம்பத்தூருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது இவர் தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது, அருண்குமார் அவரது பெற்றோர் ஆகியோர் வீட்டை காலி செய்து விட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, அருண்குமாரை தொடர்பு கொண்ட சித்ரவை, கொன்று விடுவேன் என்று அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் நிலையத்தில், தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல், தனது நகைகள், பணத்தை அபகரித்த அருண்குமார் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.
அதன் பேரில், மோசடி செய்த அருண்குமார் அவரது பெற்றோர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அதன் பிறகு,அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு கலைவாணர் நகர் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3லட்சம் அட்வான்ஸ் கொடுத்து வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளனர். மேலும், எங்களுடன் மாமனார் சௌந்தரபாண்டியன், மாமியார் சரஸ்வதி ஆகியோர் தங்கியிருதுள்ளனர். இதற்கிடையில்,சரிவர வேலைக்கு செல்லாமல் அருண்குமார் வீட்டில் இருந்து வந்துள்ளார். பின்னர், திருமணம் முடிந்து வேலை இல்லாதது தெரியவந்தது. இதனை அடுத்து, அருண்குமார் புதிய தொழில் தொடங்குவதற்காக எனது தந்தையிடம் பணம் வாங்கி வர கூறியுள்ளார்.
இதன் பிறகு, கடந்த மாதம் நான் சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு சென்று பெற்றோரிடம் பணம் வாங்க சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அம்பத்தூருக்கு திரும்பி வந்துள்ளார்.அப்போது இவர் தங்கிருந்த வீடு பூட்டப்பட்டு கிடந்துள்ளது. இதனையடுத்து வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது,கணவர் மற்றும் குடும்பத்தினர் வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து நான் கணவர் அருண்குமாரை தொடர்பு கொண்டபோது என்னை கொன்று விடுவதாக மிரட்டுகிறார். என்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல், எனது நகைகள்,பணத்தை அபகரித்த அருண்குமார் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.Conclusion: