சென்னை ஆவடி, பூம்பொழில் நகரில் வசித்து வந்தவர் புஜ்ஜி ரமேஷ். முன்னாள் ரவுடியான இவர், தனது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர், கொலை தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை தொழிற்சாலை ஊழியர்களான புஜ்ஜி ரமேஷின் தாய் மாமன்கள் இருவரைக் கைது செய்தனர்.
புஜ்ஜி ரமேஷ் அவரது தாய் நாகராணியிடம் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்டதால் அவரது தாய் மாமன்கள் அவரை அடித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட புஜ்ஜி ரமேஷின் தாய்மாமன்களான குணசேகரன், முனியப்பன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பிரபல ஜவுளி நிறுவன ஊழியர் அடித்துக் கொலை - உரிமையாளர் மீது உறவினர்கள் புகார்