ETV Bharat / state

நிறுவனத்திற்குள் புகுந்த திருடன் - சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ் - அம்பத்தூர் திருட்டு

அம்பத்தூரில் தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த திருடனை, சம்பவ இடத்திலேயே காவல் துறையினர் சுற்றி வளைத்து கையும், களவுமாக கைது செய்துள்ளனர்.

திருடனை சுற்றி வளைத்து கைது செய்த காவல் துறை

author img

By

Published : Mar 1, 2022, 10:13 PM IST

சென்னை: அம்பத்தூர் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (36). இவர், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், பாலாஜி நகர் தொழிற்பேட்டையில் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி ஹரிகிருஷ்ணன் நிறுவனத்தைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். பின்னர், மறுநாள் அவர் வந்து பார்க்கும் போது நிறுவனத்தின் கதவிலுருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும், அங்கிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பித்தளைப் பொருள்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அன்று நடந்ததுபோல இன்றும் அதிகாலையில் நிறுவனத்திற்குள் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை, ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்தபடி செல்ஃபோன் வழியாக கண்காணிப்புக் கேமராவில் கண்டறிந்தார். உடனடியாக அவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், நள்ளிரவு ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பழனி தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

பின்னர், நிறுவனத்திற்குள் புகுந்த இளைஞரை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், 10ஆவது தெருவைச் சேர்ந்த நரி என்ற கவுதம் (20) என்பது தெரியவந்தது.

திருடனை சுற்றி வளைத்து கைது செய்த காவல் துறை

மேலும், இவர் தான் கடந்த 25ஆம் தேதி நிறுவனத்திற்குள் புகுந்து மூலப்பொருள்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இவர் மீது 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருடிய பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் சிசிடிவி கேமரா பதிவை கொண்டு கொலையாளியை பிடித்த பிடித்த போலீசார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.