ETV Bharat / state

விஷ சாராய விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி கைது... அடுத்தடுத்து வெளிவரும் திருப்பங்கள்!

மெத்தனால் கலந்த விஷ சாராயத்தால் 22 பேர் பலியான விவகாரத்தில் சுமார் 1000 லிட்டர் மெத்தனால் சப்ளை செய்த கெமிக்கல் ஆலை உரிமையாளரை சென்னையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Chennai
விஷ சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது
author img

By

Published : May 17, 2023, 11:07 AM IST

சென்னை: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் அருந்தியதில் சுமார் 22 பேர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர் முதல் கண்காணிப்பாளர்கள் வரை அதிரடியாக தமிழ்நாடு காவல் துறையால் சஸ்பெண்ட் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். குறிப்பாக 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.

முதற்கட்டமாக மாவட்ட காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் அனைவரும் கள்ளச்சாராயத்தில் உயிரிழக்கவில்லை என்றும்; மெத்தனால் என்ற விஷ சாராயத்தால் உயிரிழந்துள்ளனர் என தமிழக டிஜிபி விளக்கம் அளித்தார். இருப்பினும், இந்த மெத்தனால் என்கிற விஷ சாராயத்தை சப்ளை செய்த நபர்கள் யார் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது, இந்த விஷ சாராயத்தை வாங்கிய விவகாரத்தில் ஊதியூரைச் சேர்ந்த அமரன் என்பவர் கைது செய்யப்பட்டு, அமரனுக்கு சப்ளை செய்த முத்து ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் அனைவரும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரிடமிருந்து விஷ சாராயத்தை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்ததை அடுத்து, தற்போது அவரும் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, பாண்டிச்சேரி ஏழுமலையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனிப்படை ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான போலீசார் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள விநாயகா எண்டர்பிரைசஸ் எனப்படும் தனியார் கெமிக்கல் ஆலை உரிமையாளர் இளையநம்பி என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் இளைய நம்பியிடம் இருந்து சுமார் 1000 லிட்டர் மெத்தனால் விஷ சாராயத்தை வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இளைய நம்பியை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், மேலும் 4 பேரை விசாரணைக்காக தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷ சாராயத்தை சப்ளை செய்த நபர்கள் யார்... யார்? என்ற தொடர் தேடுதல் வேட்டையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருவதாகவும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கின் தன்மையை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவை அடிப்படையாக வைத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து விசாரணையை துவக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே மாவட்ட காவல் துறையினரால், இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக விசாரணை அதிகாரியை நியமித்து விரிவான விசாரணையை நடத்தி தொடர்புடைய அத்தனை நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் - திமுக கவுன்சிலரின் கணவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.