ETV Bharat / state

டிஎஸ்பி எனக் கூறி தொழிலதிபரை ஏமாற்றிய காவலர் கைது - அண்மை செய்திகள்

காவல் துணைக் கண்காணிப்பாளர் எனப் பொய்யாகக் கூறி தொழிலதிபரின் நிலத்தை மோசடி செய்ய முயன்ற முன்னாள் தலைமைக் காவலர் கைதுசெய்யப்பட்டார்.

டி.எஸ்.பி என கூறி மக்களை ஏமாற்றிய காவலர் கைது

author img

By

Published : Apr 15, 2021, 7:16 AM IST

சென்னை அண்ணாநகர் 6ஆவது அவென்யூவைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி உன்னிதன் (84). இவர் பிரபல ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனமான சங்கர் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர்.

இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் காவலர் உடையில் வந்த ஒருவர் தன்னை கிரைம் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் எனவும், தன்னுடன் வந்த மற்ற இருவர் மஃப்டியில் வந்த கிரைம் பிரிவு காவல் துறையினர் என்றும் கூறி கைதுசெய்ய முயன்றுள்ளனர்.

டிஎஸ்பி எனக் கூறி மக்களை ஏமாற்றிய காவலர் கைது

இதனால், ஸ்ரீதேவி உன்னிதனின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் திரண்டுவந்துள்ளனர். போதையில் வந்திருந்த அந்த நபர் குடும்பத்தினர் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தமையால் சந்தேகமடைந்தனர்.

பின்னர், காவலர் உடையில் வந்த அந்த நபரை திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ’’காவல் துணைக் கண்காணிபாளரான தன்னிடம் பதவி குறைவான நீங்கள் விசாரணை நடத்த முடியாது’’ எனக் காவல் உடையணிந்த நபர் கூறி பிரச்சினை செய்துள்ளார்.

விசாரணையில், தன்னை காவல் துணைக் கண்காணிப்பாளர் எனக் கூறிவந்த அந்த நபர் யானைக்கவுனி காவல் நிலைய தலைமைக் காவலர் டேவிட் ஆனந்தராஜ் (54) என்பது தெரியவந்தது. இவர் 2018ஆம் ஆண்டிலிருந்து பணிக்குச் செல்லாமல் ஒழுங்கீனமாக நடந்துவந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக' - திருமாவளவன் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.