ETV Bharat / state

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய பெண்: டிப்டாப் மேக்கப் ஆர்டிஸ்ட் சிக்கியது எப்பது? - சென்னை

சாப்ட்வேர் இன்ஜினியர் போல டிப்டாப்பாக நடித்து ஆந்திராவிலிருந்து ரயில் மூலமாக கஞ்சா கடத்தி சென்னையில் விற்பனை செய்து வந்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

crime
ஆந்திரா to சென்னை கஞ்சா கடத்திய பெண்
author img

By

Published : Apr 29, 2023, 9:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சமீப காலங்களாக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் போதை பொருட்கள் கடத்தி வந்து விற்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நுங்கம்பாக்கம் சுடுகாடு பகுதியில் நைட்ரோவிட் வலி நிவாரண மாத்திரைகள் கைமாறுவதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அவர்களுக்கு கிடைத்த அந்த ரகசிய தகவலின் பேரில், நுங்கம்பாக்கம் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆட்டோவில் போதை பொருள் கைமாற்ற வந்த போது 1.5 கிலோ கஞ்சா மற்றும் 75 நைட்ரோவிட் மாத்திரைகளுடன் ஆட்டோ ஓட்டுனரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் சேத்துப்பட்டை சேர்ந்த அஜய் (27) என தெரிவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட அவரை போலீசார் தீவிரமாக விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாது. தற்போது அவர் கொடுத்த தகவலின் பேரில், திருமுல்லைவாயலில் பதுங்கி இருந்த சூளைமேட்டை சேர்ந்த ராஜூ என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில், சூளைமேட்டை சேர்ந்த கஞ்சா வியாபாரியான ராஜூ மீது கஞ்சா விற்பனை, செல்போன் பறிப்பு என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. பல முறை சிறைக்கு சென்றும் திருந்தாத ராஜூ தொடர்ச்சியாக திருமுல்லைவாயலில் தங்கி சூளைமேடு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் ஆட்களை வைத்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக சென்னைக்குள் கஞ்சாவை கடத்தி வந்தது எப்படி என ராஜுவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த முன்னாள் காதலி பிரியா (22) என்பவர் மூலமாக கொண்டு வருவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து ராஜுவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரியாவை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது, நான்கு வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக ராஜுவிடம் பழக்கம் ஏற்பட்டு காதல் செய்து வந்ததாகவும், பின்பு கடந்த ஓராண்டுக்கு முன்பு ராஜுவை பிரிந்து ஆந்திராவை சேர்ந்த சின்னி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வருவதாகவும் தெரிவித்த அவர், அதன் பிறகு ராஜுவுடன் எந்த தொடர்பும் இல்லை எனவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து போலீசாருக்கு சந்தேகம் வராத படி நவநாகரிகமான உடை மற்றும் ஆங்கிலத்தில் பிரியா பேசியதால் வழக்கில் தொடர்பில்லை என நினைத்து அனுப்பிவிட்டுள்ளனர். பின்னர் மீண்டும் ராஜுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போதும் அவர் அதே வாக்குமூலம் அளித்ததால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு தி.நகரில் தங்கியிருந்த பிரியாவை பிடித்து மீண்டும் போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.

அப்போது முடிந்த அளவு சமாளித்த பிரியா ஒரு கட்டத்திற்கு மேல், என்ன செய்வது என தெரியாமல் கஞ்சா கடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் பிரியாவின் கணவர் சின்னி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிதடி வழக்கொன்றில் சிறைக்கு சென்றதால் பிரியாவுக்கு பணத்தேவை அதிகரித்ததாகவும், இதனால் கடனாக ராஜுவிடம் பிரியா பணம் கேட்டப்போது, ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தால் கமிஷனாக பணம் தருவதாக கூறியுள்ளார்.

வேறு வழியில்லாத பிரியா ஆந்திராவிலிருந்து கொடுக்கும் கஞ்சாவை ஐடி ஊழியர் போல டிப்டாப்பாக உடை அணிந்து ரயில் மூலமாக சென்னைக்கு வந்து கொடுப்பதை பிரியா வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக கடந்த 4 மாதங்களாக ஒவ்வொரு முறையும் சுமார் 10 கிலோவுக்கு குறையாமல் கஞ்சா கடத்தி வந்ததும், அதற்கு ஒவ்வொரு முறையும் 40 ஆயிரம் ரூபாய் வரை பிரியா கமிஷன் தொகையாக பெற்று வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் டிப்டாப்பாக ரயிலில் கஞ்சா கடத்தி வருவதால் போலீசாருக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை என்றும் பிரியா தெரிவித்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் உட்பட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா வியாபாரி ராஜுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை சப்ளை செய்த மீனம்பாக்கம் சத்யா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பல நாட்களாக கைவரிசை காட்டிய பலே திருடன்: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்: நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.