ETV Bharat / state

ஆட்டோவில் சென்ற நபரை கொலை செய்த கும்பலுக்கு வலைவீச்சு - Tondiarpet Antagonism murder issue

தண்டையார்பேட்டை அருகே ஆட்டோவில் சென்ற நபரை தாக்கிய ஐந்து பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

வலைவீச்சு
வலைவீச்சு
author img

By

Published : Dec 27, 2021, 11:42 AM IST

சென்னை: தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஆட்டோவில் சென்றுகொண்டியிருந்தார்.

அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், ஆட்டோவை வழிமறித்து சீனிவாசனை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து புதுவண்ணாரப்பேட்டை அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்தியால் வெட்டி, கொலை செய்துவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற புதுவண்ணாரப்பேட்டை காவலர்கள், சீனிவாசன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பசுபதி (18) என்பவரை சீனிவாசன், கடந்த 24ஆம் தேதி இரவு நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளார்.

ஆபத்தான நிலையில் பசுபதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதும், இது தொடர்பாக அவரது நண்பர்கள், உறவினர் மூன்று பேர் சேர்ந்து சீனிவாசனை கொலைசெய்ய முயன்றதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் புதுவண்ணாரப்பேட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: கணவரைக் கொன்று உடலை மறைத்த மனைவி - நடந்தது என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.