சென்னை: துரைப்பாக்கம், ரேடியல் சாலையில் உள்ள சென்னை ஒன் ஐடி கம்பெனியில் ஆல்பா டவர் 5ஆவது மாடியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தவர், போரூரை சேர்ந்த சாம் சுந்தர்(47). இவர் கடந்த ஆண்டு செம்படம்பர் மாதம் முதல் இங்கு பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் நிறுவனத்தின் பின்னால் சத்தம் கேட்டதாக காவலாளி சென்று பார்த்த போது, அங்கு ரத்த வெள்ளத்தில் சாம் சுந்தர் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து காவலாளி அளித்த தகவலின் பேரில் துரைப்பாக்கம் போலீசார் வந்து, சாம் சுந்தரை அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி சாம் சுந்தர் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் விசாரணையில் 7வது மாடியில் இருந்து குதித்து சாம் சுந்தர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் இவ்வளவு குற்றங்களா..? - புள்ளி விவரங்கள் வெளியீடு!