ETV Bharat / state

பூட்டை உடைக்க புதிய டெக்னிக்; சாதுர்யமாக திருடிய திருடனுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை புரசைவாக்கம் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் துணி மற்றும் இரும்பு ராடை வைத்து சத்தமில்லாமல் கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.

police actively looking for the thief who cleverly broke the lock and stole
பூட்டை உடைக்க புதிய டெக்னிக்; சாதுர்யமாக திருடிய திருடனுக்கு வலைவீச்சு
author img

By

Published : Feb 6, 2023, 7:00 PM IST

சென்னை புரசைவாக்கம் மூக்காத்தால் தெருவில் துணிக்கடை நடத்தி வருபவர், கணேஷ். இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை கணேஷ் நடத்தும் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்த அருகிலிருந்த கடை உரிமையாளர் கணேஷுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கணேஷ் கடைக்கு வந்து பார்த்தபோது 1,500 ரூபாய் பணம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதே போல கரியப்பா தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருபவர், சிவகுமார். இவரது கடை பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற இரண்டு இடங்களின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வெள்ளை நிற இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு நபர்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு, கடைகளின் ஷட்டரில் போடப்பட்டிருக்கும் பூட்டை, துணியால் சுற்றி, சத்தம் வராதபடி உடைத்து கடைகளுக்குள் நுழைந்து கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தாய் கடத்தல்; மகன் அளித்த புகாரில் 5 மணிநேரத்தில் மீட்டுத்தந்த போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.