சென்னை பல்லாவரம் அடுத்த பக்தவத்சலம் பகுதியில் 17 வயது சிறுமி கடைக்கு சென்று விட்டு பல மணி நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சிறுமி காணாமல் போனதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோரு புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பக்தவத்சலம் பகுதியில் மூன்று ஆண்டுகளாக தங்கியிருந்த சுரேஷ்(23) என்பவர், சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோரும், சுரேஷிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சுரேஷ் அங்கிருந்து மதுரவாயில் பகுதியில் குடியேறியுள்ளார்.
மேலும் சுரேஷிற்கு திருமணமாகி, ஒரு வயதில் குழந்தை இருப்பதும் தெரியவந்தது. பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் சுரேஷிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் சுரேஷ் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்.
பின்னர் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்த போது, சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷின் உறவினர் வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு, காவல்துறையினர் அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வதாக கூறிய அழைத்துச் சென்றதால் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க:3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன் கைது!