ETV Bharat / state

மருத்துவச் சேர்க்கையில் ஓபிசி பிரிவுக்கு 27% இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தராமல் பாமக ஓயாது

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தராமல் பாமக ஓயாது என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Pmk youth wing leader assured to get medical College reservation

author img

By

Published : Jun 21, 2020, 12:11 AM IST

மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடுகள் தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் சுகாதாரச் சேவைகள் மற்றும் மருத்துவக் கல்விக்கான உதவித் தலைமை இயக்குநர் சீனிவாஸ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீடு என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதேனும் வாய்ப்புகள் இருக்குமா, என்பது குறித்து மத்திய அரசின் பதில் மனுவில் இரு இடங்களில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. முதலில், 11ஆவது பத்தியை எடுத்துக்கொண்டால், ” ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சலோனி குமார் வழக்கில், மாநிலங்களிலிருந்து பெறப்படும் இடங்களுக்கு மாநில வாரியான இடஒதுக்கீட்டை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தத் தயாராக உள்ளோம்” என்று பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக சுகாதாரச் சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான நிபந்தனைகள் கடுமையானவை; அநீதியானவை.

அந்த நிபந்தனைகளின் விவரம் வருமாறு:

1. மாநில அளவிலான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினாலும் கூட ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டை தாண்டக் கூடாது. அதன்படி பார்த்தால் ஓபிசி பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும்.

2. அவ்வாறு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்போது அகில இந்திய இடஒதுக்கீட்டில் இப்போது நடைமுறையிலுள்ள பொதுப் போட்டிக்கான ஒதுக்கீடு 77.5 விழுக்காடு, பட்டியலினத்தவருக்கு 15 விழுக்காடு, பழங்குடி வகுப்பினருக்கு, 7.5 விழுக்காடு ஆகியவற்றைக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில் மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் ஒத்துழைப்புடன் அகில இந்திய அளவில் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் இந்த நிபந்தனைகள் மிகவும் ஆபத்தானவை. மத்திய அரசின் சார்பில் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டையே மாநில அரசின் ஒதுக்கீடாக மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாகக் கட்டாயப்படுத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்பட வேண்டும். இந்த ஆபத்தான திட்டத்தை ஓபிசி பிரிவினருக்குக் கூடுதலாக 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளாது என்பதை நன்றாக அறிந்துகொண்டு, அந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இதுவே தவிர, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான விருப்பம் அல்ல.

அதுமட்டுமின்றி, மத்திய அரசின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டுமானால், அதற்கு தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளின் இடங்களைக் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்த வேண்டும். அதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளிக்குமா என்பது தெரியாது.

இரண்டாவதாக, சலோனி குமார் வழக்கில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டால், அதைச் செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பதில் மனுவில் 14ஆவது பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தாமாக முன்வந்து இட ஒதுக்கீடு வழங்க தயாராக இல்லை என்பதுதான் இதன் பொருளாகும்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இப்போதுள்ள கட்டமைப்பின்படியே 27 விழுக்காடு இடஒதுக்கீடு பெறும் உரிமை ஓபிசி பிரிவினருக்கு உள்ளது. அந்த உரிமையை வென்றெடுப்பதற்காகத்தான் பாமக கடந்த பல ஆண்டுகளாகப் போராடிவருகிறது. அந்த வகையில் நீதிமன்றங்களில் சட்ட ரீதியாகவும், மத்திய அரசிடம் அரசியல் ரீதியாகவும் போராட்டங்களை முன்னெடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தராமல் பாமக ஓயாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.