ETV Bharat / state

காவிரியில் கழிவுநீரை கலக்கவிடும் தொழிற்சாலைகள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் அன்புமணி - PMK leader Anbumani Ramadoss statement

சென்னை: காவிரி ஆற்றில் கழிவுநீரை கலக்கவிடும் அனைத்துத் தொழிற்சாலைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முன்வர வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
author img

By

Published : May 27, 2020, 3:53 PM IST

ஈரோடு மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றில் கழிவுநீரை கலக்கவிடும் தொழிற்சாலைகளின் செயலையும், இவ்விவகாரத்தில் அலட்சியம் பேணும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு அரசின் போக்கைக் கண்டித்தும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்தும் சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படும் கழிவு நீர், காவிரி ஆற்றில் தொடர்ந்து கலந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அத்துமீறலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாக காவிரி போற்றப்படுகிறது. ஆனால், கள யதார்த்தம் வேறாக இருக்கிறது. காவியங்களில் காவிரி புனித நதியாக போற்றப்பட்டாலும், களத்தில் காவிரி சாக்கடையாக மாற்றப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பாயும் காவிரி, மக்கள் புனித நீராடும் தலமாகத் திகழ்கிறது. ஆனால், அங்கு சென்று சேரும் காவிரியில் மொத்தம் 52 வகையான நச்சுப்பொருட்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. காவிரியில் இவ்வளவு கழிவுகள் கலந்திருப்பது விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும்.

அதன்பின்னர் காவிரியைத் தூய்மைப்படுத்துவதற்காக ’நடந்தாய் வாழி காவேரி’ என்ற பெயரிலான திட்டத்தை தமிழ்நாடு அரசு தயாரித்து, மத்திய அரசின் நிதியை கோரியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த நோக்கத்தை புரிந்து கொண்டு, காவிரியை தூய்மைப்படுத்தும் பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமே தவிர, காவிரியை கழிவுநீர் கால்வாயாக மாற்றுவதை வேடிக்கை பார்க்கக் கூடாது.

மேலும், காவிரி ஆற்றில் கழிவுநீரை கலக்கவிடும் அனைத்துத் தொழிற்சாலைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாட்டு அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முன்வர வேண்டும்.

காவிரி ஆறு 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகத் திகழ்வதால், அதைக் காக்கவும், தூய்மைப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கங்கை ஆற்றைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு நடப்பாண்டு இறுதிக்குள் மொத்தம் 20,000 கோடி ரூபாயை செலவிட உள்ளது. அதேபோல், காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கான நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காடுவெட்டி குருவின் மகனுக்கு அரிவாள் வெட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.