ETV Bharat / state

பாமக நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்!

பாட்டாள் மக்கள் கட்சியின் 2019-20ம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.

மருத்துவர் ராமதாஸ்
author img

By

Published : Feb 6, 2019, 11:45 PM IST

2019 - 2020-ம் ஆண்டிற்கான மாநில நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதி அறிக்கையை சென்னையில் உள்ள பா.ம.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனர், மருத்துவர். ராமதாஸ் இன்று வெளியிட்டார். அப்போது பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உடன் இருந்தனர். இந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விக்கும் பதில் அளித்தனர்.

இந்த நிழல் நிதிநிலை அறிக்கை குறித்து பேசிய மருத்துவர். ராமதாஸ் , " இந்த அறிக்கை அரசுக்கு உதவியாக இருக்கும். 102 தலைப்புகளில் 401 அம்சங்கள் இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுள் வேலையில்லா திண்டாட்டத்தை எப்படி ஒழிப்பது என்பது முக்கியமான ஒன்று. 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பு திண்டாட்டம் தற்போது உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 35 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.2000, தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.1000 உதவித்தோகையும். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.3000, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4000, பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்பது போன்ற அம்சங்களும். விவசாயத்தின் மூலதன மானியம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி அதில் 1 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10,000, 5 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 கிடைக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம். வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் 35 லட்ச மக்களுக்கு மாதம் ரூ.2500 வழங்க வேண்டும் என்ற ஆலோசனைகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் அரசுக்கு பெரிய செலவு ஏற்பட்டுவிட போவதில்லை." என்று கூறினார்.

undefined

மேலும், அவர் " பெண்களுக்கு 18 வயதாகும் போது 5 லட்ச நிதி வழங்க வேண்டும். அதற்கேற்ப அரசு பணம் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 72.26 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துவிட்டு காத்துக்கிடக்கின்றனர். அவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் ஆகியவையும் அதில் இடம்பெற்றுள்ளது" என்று தெரிவித்தார்.

2019 - 20 ஆன் ஆண்டிற்கான மாநில நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதி அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர். ராமதாஸ் இன்று சென்னையில் வெளியிட்டார். அப்போது பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உடன் இருந்தனர்.   

இது குறித்து பேசிய மருத்துவர். ராமதாஸ், “இந்த அறிக்கை அரசுக்கு உதவியாக இருக்கும்.102 தலைப்புகளில் 401 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுள் வேலையில்லா திண்டாட்டத்தை எப்படி ஒழிப்பது என்பது முக்கியமான ஒன்று. 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பு திண்டாட்டம் தற்போது உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 35 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு 2000 ரூபாய், தேர்ச்சி பெறாதவர்களுக்கு 1000 ரூபாய். -1000, 2000 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3000 ரூபாய். பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 4000 ரூபாய், பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு 5000 வழங்க வேண்டும்.

விவசாயத்தின் மூலதன மானியம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்துகிறோம். 1 ஏக்கருக்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும். 5 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு 50 ஆயிரம் கிடைக்கும். வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் 35 லட்ச மக்களுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கப்பட வேண்டும். இதனால் அரசுக்கு பெரிய செலவு ஏற்பட்டுவிட போவதில்லை. இத்துடன் ஜீலை மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் வலிமையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

சென்னை சேலம் எட்டு வழிச்சாலையால் 10 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். பெண்களுக்கு 18 வயதாகும் போது 5 லட்ச நிதி வழங்க வேண்டும். அதற்கேற்ப அரசு பணம் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 72.26 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துவிட்டு காத்துக்கிடக்கின்றனர். அவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலனை கருதில் கொண்டு  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.
 
பின்னர் கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ், “இரண்டு கட்சிகளோடு கூட்டணி பேசி முடித்துவிட்டோம். மதச்சார்பற்ற ஜனதாதளம், ஆம் ஆத்மி கட்சியோடு பேசி விட்டோம். அவர்களுக்கு எங்கள் சார்பில் உள் ஒதுக்கீடு செய்து தரப்படும். என்ன சப் என்று இருக்கிறதா?” என்று ராமதாஸ் கூறினார். 

அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ்  கூட்டணி பற்றி அறிவிப்பை விரைவில் அறிவிப்போம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ விவசாயிகளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைத்த அடிப்படையில் வருமானம் வழங்கப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அவர்கள் இன்னும் அதை செயல்படுத்தவில்லை. ஜி.எஸ்.டி நல்லது ஆனால் அது கொண்டுவரப்பட்ட நேரம் தவறானது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். சிவகாசி பட்டாசு தொழிற்சாலை மூப்பட்டுள்ளது. பசுமை பட்டாசு என்று ஒரு வார்த்தை உருவாக்கியுள்ளனர். அப்படியென்றால் என்னவேன்று யாருக்கும் தெரியவில்லை. இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசி வருகிறோம். நல்ல மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவர வேண்டும் என்று 2016  தேர்தல் அறிக்கையிலே நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். நிதிநிலை அறிக்கையை அடுத்தாண்டு பாட்டாளி மக்கள் கட்சி கோட்டையில் வெளியிடும்” என்று உறுதிபடக் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.