ETV Bharat / state

"விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வெளியிடும் அரசு, மறுபுறம் விளை நிலங்களை கையகப்படுத்துகிறது" - அன்புமணி!

’தமிழ்நாடு அரசு ஒரு பக்கம் விவசாயத்துக்கென தனி பட்ஜெட்டை தயாரிக்கிறது, ஆனால், மறுபக்கம் அதே விவசாய நிலங்களை கையகப்படுத்துகிறது’ என்று பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

che
che
author img

By

Published : Feb 23, 2023, 9:04 PM IST

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று(பிப்.23) பாமக சார்பில், 2023-24ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர், நிதிநிலை அறிக்கையின் சாராம்சங்கள் குறித்து பேசிய அன்புமணி, "தமிழ்நாடு அரசின் சார்பில் 2021-22ஆம் ஆண்டில் முதல்முறையாகவும், 2022-23ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டாலும், கலந்தாய்வு கூட்டங்களில் உழவர்கள் வலியுறுத்தும் பல திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுவது இல்லை.

பாமகவின் நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரை, 2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை 73,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் 53,000 கோடி ரூபாய் வேளாண்துறைக்கு செலவிடப்படும். பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர் வளத்துறைக்கு 20,000 கோடி ரூபாய் செலவிடப்படும். வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் 12,500 கோடி ரூபாய் உழவர்கள் மூலதன மானியத்திற்குச் செலவிடப்படும்.

மேலும் 2023-24ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு கடந்த காலத்தில் இழந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களின் பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு 500 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இதற்காக 3,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். தமிழ்நாட்டில் எந்தத் தொழில் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவும் வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்ற கொள்கை முடிவு இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 86 தலைப்புகளில் 307 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இவற்றை பாமக-வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு அரசின் மூன்றாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும்" என்று கூறினார்.

பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அன்புமணி, ’அரசு ஒரு பக்கம் விவசாயத்துக்கென தனி பட்ஜெட்டை தயாரிக்கிறது, ஆனால் மறுபக்கம் அதே விவசாய நிலங்களை கையகப்படுத்துகிறது’ என்றார். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த கேள்விக்கு, ’பொதுக்குழு கூட்டம் நடந்த அன்றே தான் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அது இப்போதும் பொருந்தும் என்றும்’ குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: பெண் கல்விக்கு எதிரான கருத்தை விதைக்கும் எண்ணம் நிறைவேறாது: முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.