இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் புனித வழிபாட்டுத் தலமான நீராவியடி பிள்ளையார் கோயிலில், புத்த துறவியின் உடலை தீயிட்டு எரித்து சிங்கள இனவெறித் தாக்குதலை சிங்கள இராணுவத் துணையுடன் புத்த துறவிகள் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழர்களுக்கு தாங்கள் வழிபடும் ஆலயங்கள் எவ்வளவு புனிதமானவை என்பதை உணராமல் அவர்களின் உணர்வுகளையும், வழிபாட்டு உரிமைகளையும் மதிக்காமல், வழிபாட்டுக்கு உரிய கோயிலில் சடலத்தை எரித்தது, இனப்படுகொலைக்கு நிகரான செயலாகும் என்றும் ராமதாஸ் கண்டித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தமிழீழம் அமைத்துத் தருவதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ள ராமதாஸ், அதுவரை ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் வாழ்வதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும், உலக நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "இந்தியாவில் காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்க" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!